போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.3½ கோடி மோசடி


போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.3½ கோடி மோசடி
x
தினத்தந்தி 8 April 2018 5:03 AM IST (Updated: 8 April 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.3 கோடியே 66 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

தானே நவ்பாடா பகுதியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் கடன் வாங்கியவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கி இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வங்கி உயர் அதிகாரிகள் நவ்பாடா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தனியார் வங்கியில் வேலை பார்த்த ஊழியர்களே தரகர்கள் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடியே 66 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வங்கி அதிகாரிகளான ரோகித் பவசார், சேத்தன் சேரே, ஊழியர்களான நித்தின், கீரிஷ் போகிர், ரோஷன் பாட்டக், தரகர் பிரசாந்த் கவுர் பசீர் சேக் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளனர். 

Next Story