கோவில் திருவிழாவில் ஒரு சமூகத்தினரை புறக்கணிப்பதை தடுக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை


கோவில் திருவிழாவில் ஒரு சமூகத்தினரை புறக்கணிப்பதை தடுக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 10 April 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் ஒரு சமூகத்தினரை புறக்கணிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே நன்னிலம் தாலுகா வண்டாம்பாளை பகுதி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்்தில் நடந்த மக்கள் குறைதீர்்க்கும் கூட்டத்்தில் கலந்து கொண்டு கலெக்டர் நிர்மல்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அருகே நன்னிலம் தாலுகா வண்டாம்பாளை பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் எங்கள் சமூகத்தினரும் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். இதுவரை கோவில் திருவிழா அமைதியாக நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் திருவிழாவின் போது வீதி உலா எங்கள் பகுதிக்கு வர வேண்டும் என கோவில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எங்கள் சமூகத்தினரை புறக்கணித்து விட்டு கோவில் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே எங்கள் சமூகத்தினரை புறக்கணிப்பதை தடுத்து எங்கள் பகுதிக்கு சாமி வீதி உலா வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

Next Story