சமரச மையத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக வைக்கப்படும் நீதிபதி தகவல்
சமரச மையத்தில் நடத்தப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியமாக வைக்கப்படும் என விழிப்புணர்வு முகாமில் முதன்மை நீதிபதி இளவழகன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாற்றுவழி தீர்வு மையத்தின் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கு தரப்பினர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகும்போது, தங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். சமரச மையத்தில் வழக்கு தரப்பினர் எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.
இதில் வழக்கு தரப்பினர் வக்கீலும் பங்குகொண்டு தங்களுக்கு உதவலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சு வார்த்தைகளும் ரகசியமாக வைக்கப்படும். அது வழக்கு தரப்பினர் வழக்கை, எந்த வகையிலும் பாதிக்காது. இதில் சமரசத்தின் மூலம் தங்கள் வழக்கு தீர்க்கப்பட்டால், நீதிமன்ற கட்டணத்தை தங்களிடமே திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும். சமரசம் ஏற்படவில்லை என்றால், வாதத்தை நீதிமன்றத்தின் முன் தொடரலாம்.
கூடுதல் கட்டணம் இல்லை
நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முதலியவை சமரச மையத்தில் உள்ளன. வழக்கு தரப்பினர் தாங்களே முன்வந்து ஒப்புக்கொள்ளும் தீர்வுகள் எட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். அதை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். முகாமில் மாவட்ட நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், அரசு வக்கீல்கள், சமரசர்கள், அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், அரசு சாரா சமூக நல ஆர்வலர்கள், போலீஸ் அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story