காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 7:47 AM IST (Updated: 11 April 2018 7:47 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் மதியழகன் வரவேற்றார்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். மீத்தேன், நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. திட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சந்திரசேகரன் (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்), முரளிதரன் (தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்), மாவட்ட செயலாளர்கள் ரெங்கசாமி (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), குருசாமி (தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்), தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சார்லிதேவப்பிரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முடிவில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட இணை செயலா ளர் பெரியசாமி நன்றி கூறினார். 

Next Story