காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை செயலாளர் புவியரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவில் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் குணசேகரன் தொடங்கிவைத்தார். இதில் வட்டாரத்தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கந்தர்வகோட்டை தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். இதில் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைமை அல்போன்ஸ் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் தேவராஜி, மாவட்ட துணைத்தலைவர் இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஜான்மரிய ஜோசப் தலைமை தாங்கினார். இதில் வட்டார செயலாளர் ஜான் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர்

இதேபோல தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய வரைபடத்திடம் தமிழ்நாடு வரைபடத்தை மனுவாக கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story