தேர்தலில் டிக்கெட் கிடைக்காத காங்கிரஸ், பா.ஜனதாவினர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தனர்
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தனர். ஆட்சியை பிடிப்போம் என தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தனர். ஆட்சியை பிடிப்போம் என தேவேகவுடா கூறினார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெங்களூரு சி.வி.ராமன்நகர் தொகுதியில் டிக்கெட் வழங்குமாறு பி.ரமேஷ் கேட்டார். அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதேபோல் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் களம் இறங்க தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலரும், நடிகை அமுல்யாவின் மாமனாருமான ராமச்சந்திரா கேட்டு இருந்தார். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரசாகருக்கும் சிக்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பி.ரமேஷ், ராமச்சந்திரா, அவருடைய மருமகளான நடிகை அமுல்யா மற்றும் ஹேமச்சந்திரசாகர் ஆகியோர் தாங்கள் இருந்த கட்சியை விட்டு விலகி பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தனர். அவர்களுக்கு கட்சி கொடியை வழங்கி தேவேகவுடா வரவேற்று கட்சியில் சேர்த்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்று(அதாவது நேற்று) மகிழ்ச்சியான தினம். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த முக்கியமான தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். நாளுக்குநாள் ஜனதா தளம்(எஸ்) கட்சி பலம் பெற்று வருகிறது. குமாரசாமிக்கு மக்களின் ஆசி கிடைப்பது உறுதி. நான் எப்போதும் தெய்வ நம்பிக்கை கொண்டவன். இந்த முறை நாங்கள் ஆட்சியை பிடிப்போம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
உப்பள்ளி, ராய்ச்சூர் பகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர் எங்கள் கட்சியில் சேர உள்ளனர். இன்னும் 4, 5 நாட்களில் ஏராளமான மாற்று கட்சி நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேருவார்கள். பெங்களூருவில் மட்டும் எங்கள் கட்சி 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு இன்று(நேற்று) கட்சியில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே காரணம். கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இன்றி பணியாற்ற வேண்டும்.
கர்நாடகத்தில் மிக மோசமான ஆட்சி நிர்வாகம் நடக் கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறான செயல்பாடுகளால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும். அதற்கு குறைந்தது ஓராண்டு தேவைப்படும். நான் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவேன். இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story