காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 8:18 PM GMT)

காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சோழபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள்,

காஷ்மீரில் சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சோழபுரம் கடைவீதியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை தாங்கினார். மகிளா காங்கிரஸ் தலைவர் ஜீவா, நகர நிர்வாகிகள் யாசின், மிசாவுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், பாலியல் வன்முறைகளை தடுக்க உறுதியான சட்டங்களை இயற்ற வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் முருகானந்தம், வட்டார தலைவர்கள் பாலு, சபில் ரகுமான் உள்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story