கருணாநிதி, கனிமொழி பற்றி அவதூறு பேச்சு: எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்


கருணாநிதி, கனிமொழி பற்றி அவதூறு பேச்சு: எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-20T02:16:00+05:30)

கருணாநிதி, கனிமொழி பற்றி அவதூறு பேசியதாக கூத்தாநல்லூர் அருகே எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொடர்புடைய 45 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கனிமொழி ஆகியோர் பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து வடபாதிமங்கலம் கடைவீதியில் நேற்று அவரது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுப்பிரமணியன், அவைத்தலைவர் அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல லெட்சுமாங்குடியில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வை சேர்ந்த 10 பேர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

Next Story