ஜெயிலில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகனிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
வேலூர் மத்திய ஜெயிலில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனிடம் மாஜிஸ்திரேட்டு அலீசியா விசாரணை நடத்தினார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முருகன் தங்கியிருந்த அறையில் 2 செல்போன்கள், சார்ஜர் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறை அதிகாரி உள்பட 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். சாட்சிகளிடம் வக்கீல் இல்லாமல் முருகனே குறுக்கு விசாரணை நடத்தினார். கடந்த 17-ந் தேதி 7 சாட்சிகளிடமும் முருகன் குறுக்கு விசாரணை நடத்தி முடித்தார்.
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக முருகன் பலத்த போலீஸ் காவலுடன் காலை 11.30 மணியளவில் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முருகனிடம், மாஜிஸ்திரேட்டு அலீசியா விசாரணை நடத்தினார். அப்போது 7 சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனிடம் மாஜிஸ்திரேட்டு சரமாரியாக கேள்விகள் எழுப்பினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த விசாரணை நடந்தது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்தார். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related Tags :
Next Story