500 பேரிடம் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது


500 பேரிடம் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 20 April 2018 5:17 AM IST (Updated: 20 April 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

இரு மடங்கு பணம் திருப்பி தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.5 கோடி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

நவிமும்பை வாஷி பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (வயது35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இவர் 2 மடங்கு பணம் திருப்பி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்தார். ஆரம்பத்தில் நரேஷ் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு கணிசமான பணத்தை திருப்பி கொடுத்தார். இதனால் பலர் அவரிடம் முதலீடு செய்ய தொடங்கினர்.

இந்தநிலையில் அவர் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.

பணம் கொடுத்து ஏமாந்த நூற்றுக்கணக்கான மக்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் நரேஷ் சுமார் 500 பேரிடம் ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர் நவிமும்பை பகுதிக்கு வர உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நரேசை அதிரடியாக கைது செய்தனர். 

Next Story