திருப்புகலூர் முடிகொண்டானாற்றில் புதிய பாலம் கட்டி தரவேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


திருப்புகலூர் முடிகொண்டானாற்றில் புதிய பாலம் கட்டி தரவேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 7:14 PM GMT)

புதிய பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல்,

திருமருகல் அருகே திருப்புகலூர் முடிகொண்டானாற்றில் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் மெயின் ரோட்டில் முடிகொண்டானாற்றின் குறுக்கே மிகவும் குறுகலான கான்கிரீட் பாலம் உள்ளது. திருப்புகலூர்-திருக்கண்ணபுரம் இடையே உள்ள இப்பாலத்தின் வழியே நாகை, திருவாரூருக்கு பஸ்கள் சென்று வந்து கொண்டிருக்கிறது. மேலும் திருப்புகலூர் அக்னீசுவரசாமி கோவில், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில், திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரசாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும், திருப்புகலூர்-திருக்கண்ணபுரம் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் தினமும் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் இப்பாலம் பழுதாகி சேதமடைந்துள்ளன. மேலும் குறுகலான இப்பாலத்தில் பஸ்கள் சென்றுவர முடியாமல் பாலத்தின் இருபக்கங்களிலும் உரசி கொண்டு சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. நாகை-நன்னிலம் சாலையிலிருந்து பிரிந்து குறுகலான இப்பாலத்திற்குள் செல்ல முடியாமல் பஸ் டிரைவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் நாகை-நன்னிலம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பழுதான குறுகிய பாலத்தை அகற்றி பஸ் போக்குவரத்திற்கான புதிய பாலம் கட்டி தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story