நாகை மாவட்டத்தில், இதுவரை ரூ.51 கோடியில் கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன - கலெக்டர் சுரேஷ்குமார்


நாகை மாவட்டத்தில், இதுவரை ரூ.51 கோடியில் கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன - கலெக்டர் சுரேஷ்குமார்
x
தினத்தந்தி 20 April 2018 11:15 PM GMT (Updated: 20 April 2018 7:37 PM GMT)

நாகை மாவட்டத்தில், இதுவரை ரூ.51 கோடியில் கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில், இதுவரை ரூ.51 கோடியே 18 லட்சம் மதிப்பில் கறவைப்பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் உயர்த்திடும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தமிழக அரசின் விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் இதுவரை 81 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 950 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 950 கறவைப்பசுக்கள் ரூ.14.18 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏழைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் ஆகியோரின் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் இதுவரை 28 ஆயிரத்து 632 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 528 வெள்ளாடுகள் ரூ.37 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் இதுவரை 11 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையம் ஏதுமில்லாத குக்கிராமங்களில் உள்ள கால்நடைகள் பயன்பெறும் வகையில் நோய் தடுப்பு மற்றும் நோய் நீக்கப்பணிகளுக்காக ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் 1,127 கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story