அமித்ஷா ஒரு இந்துவே கிடையாது முதல்-மந்திரி சித்தராமையா தாக்கு
அமித்ஷா ஒரு இந்துவே கிடையாது என்று முதல்-மந்திரி சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
மைசூரு,
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சித்தராமையா நேற்று மைசூரு நஜர்பாத்தில் உள்ள மினி விதானசவுதாவில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையொட்டி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மினி விதானசவுதா அலுவலகம் முன்பு திரண்டனர். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த கருத்தரங்கத்தில் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
நாங்கள் கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதத்தில் இருந்து ராகுல்காந்தியுடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறோம். நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் எங்களுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. நாங்கள் மக்கள் மனதில் உள்ளோம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக பேச வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை. அவர்கள் 2 பேரும் என் மீதும், என்னுடைய அரசு மீதும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு எதிராக நான் பேசுகிறேன். தற்போதைய காங்கிரஸ் ஆட்சியை விட, கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள் மீது தடியடி சம்பவங்களும் நடந்துள்ளன.
அமித்ஷா என்னை இந்து கிடையாது என்று கூறி வருகிறார். ஆனால் நான் சொல்கிறேன். அமித்ஷா ஒரு இந்துவே கிடையாது. அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். தான் ஜெயின் அல்ல, இந்து தான் என்று அமித்ஷா சொல்லட்டும் பார்ப்போம். வன்முறையை தூண்டிவிட்டு பிரிவினையை ஏற்படுத்துவதே பா.ஜனதாவினரின் வேலை. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பா.ஜனதாவினர் செயல்பட்டு வருகிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதாவினர் பிரசாரத்துக்காக 40 ராஜதந்திரிகளை களம் இறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜனதாவினர் எத்தனை பேர் வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்கள் 40 பேர் வந்தாலும், காங்கிரசுக்கு ராகுல்காந்தி ஒருவரே போதும்.
ராகுல்காந்தி வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். வேறு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வோம். எனக்கு இது தான் கடைசி அரசியலாகும். மத்திய அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story