கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், மர்ம நபர்கள் சிலர் மாட்டு வண்டிகள், மினி வேன், லாரிகள் மூலம் அதிக அளவில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அய்யன் வாய்க்காலுக்கும், கொள்ளிடம் ஆற்றுக்கும் இடையே செல்லும் மண் சாலையின் வலது ஓரத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றை ஒட்டியவாறு மர்ம நபர்கள், அரசு மணல் குவாரி போல் மணல் சேமிப்பு கிடங்கு அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக தனியாக பாதை அமைத்து, அதன் வழியாக நள்ளிரவில் பொக்லைன் எந்திரம், லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளை ஆற்றுக்குள் கொண்டு செல்கின்றனர். அங்கு பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவற்றின் மூலம் ஆற்றில் இருந்து மணலை அள்ளி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டி சேமிக்கின்றனர்.
அங்கிருந்து மணலை உடனடியாக லாரிகளின் மூலம் வெளியூர்களுக்கும், மாட்டு வண்டிகள் மூலம் உள்ளூர் பகுதிகளுக்கும் விற்பனைக்காக கடத்தி செல்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஏராளமான யூனிட் மணல் கடத்தப்படுகிறது. வாகனங்கள் அனைத்தும் அங்கிருந்து மணல் ஏற்றிச்சென்ற பின்னர், மணல் கொள்ளை நடந்ததே தெரியாத அளவுக்கு, மர்ம நபர்கள் பாதையின் குறுக்கே பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்திவிட்டு செல்கின்றனர்.
இந்த மணல் கொள்ளை சம்பவம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story