பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.9 கோடி மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.9 கோடி மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு பவானிரோடு பகுதியை சேர்ந்தவர் விக்ரம்சுதாகர். இவருடைய மனைவி ஐஸ்வர்யாலட்சுமி (வயது 38). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
நானும் எனது மாமனார் அய்யாதுரையும் சேர்ந்து பல ஆண்டுகளாக கெமிக்கல் தொழில் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனம் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் சார்பில் பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்கள் கம்பெனிக்கு வந்து எங்களுடைய கம்பெனியில் பங்குகளை விலைக்கு வாங்கினால் 3 ஆண்டுகளில் மூன்று மடங்கு தொகை லாபமாக தருவதாக ஆசைவார்த்தை கூறினார்கள். இதைநம்பி நாங்கள் 60 லட்சம் பங்குகளுக்கான ரூ.3 கோடியை அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்தநிலையில் நாங்கள் செலுத்திய பணத்திற்கான பங்குகளின் லாபத்தொகையாக ரூ.9 கோடியை அந்த சென்னை நிறுவனம் எனது மாமனாரின் கணக்கில் செலுத்தினார்கள். மீண்டும் அந்த ரூ.9 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிகமான பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். இதனைநம்பி ரூ.9 கோடியை அந்த நிறுவனத்தின் வங்கி கணக் கிற்கு அனுப்பி வைத்தோம். தற்போது அந்த நிறுவனத்தினர் எங்களுக்கு எந்த லாபத்தொகையும் வழங்கவில்லை. இதுபற்றி நாங்கள் கேட்டபோது உரிய விளக்கம் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகார்மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இதுதொடர்பாக ஐஸ்வர்யாலட்சுமி சென்னை ஐகோர் ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஐஸ்வர்யாலட்சுமியின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் மோசடியில் ஈடுபட்டதாக சென்னை நிறுவனத்தின் தலைவர் சங்கர், துணைத்தலைவர் குமார், இணைத்தலைவர் விஜயசங்கர், விஸ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story