விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து பயணி எடுத்து வந்த வெளிநாட்டு பணம் பறிமுதல்


விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து பயணி எடுத்து வந்த வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-24T02:40:11+05:30)

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து பயணி எடுத்து வந்த வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து தினமும் மதியம் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் அந்த விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.

அந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி உள்ளாடையில் மறைத்து ரூ.33 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பறிமுதல்

இதில் அவர் திருச்சியை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பதும், அவர் திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக கோலாலம்பூர் செல்ல வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story