கோவை அருகே குட்கா தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம்: தி.மு.க. நிர்வாகிகள் 7 பேர் சிறையில் அடைப்பு
ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை அருகே குட்கா தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அந்த வழக்கு தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக்கை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் இயங்கி வந்த குட்கா தொழிற்சாலையில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப் பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தி.மு.க. கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை குறித்த விவரங்களை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சற்று நேரத்தில் அங்கு கூடிய திமு.க.வினர் குட்கா தொழிற்சாலையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது குட்கா வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து குட்கா தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தி.மு.க.வை சேர்ந்த கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான தளபதி முருகேசன் (53), ஒன்றிய செயலாளர் பி.எஸ்.செல்வராஜ் (52), சுல்தான்பேட்டை ஒன்றிய துணை செயலாளர் பரமசிவம் (50), மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் (34), நகர செயலாளர் கபிலன் (49), கண்ணம்பாளையம் கிளை செயலாளர் கே.என்.சண்முகம் (53), தி.மு.க. உறுப்பினர் செல்வராஜ் (47) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கலவரம் செய்யும் நோக்கத்தில் கூடுதல்), 148(ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களுடன் கலவரம் செய்யும் நோக்கத்தில் கூடுதல்), 294 பி (தகாத வார்த்தைகளில் பேசுதல்), 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (2) (கொலை மிரட்டல் விடுத்தல்), 188 (அரசு ஊழியரின் கட்டளைக்கு பணிய மறுத்தல்), 341 (தவறான நோக்கத்து டன் மற்றவர்களை அடக்குதல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குட்கா தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக நேற்று அதிகாலை போலீசார் பீளமேடு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் எம்.எல்.ஏ. இல்லை. அவர் வெளியூர் சென்றிருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்காக சூலூர் போலீஸ் நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருமாறு கூறி விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வழக்கில் கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் 7 பேரையும் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்திருப்பதாக தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்மணி மற்றும் தி.மு.க. வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஆனால் நேற்று மே தினம் விடுமுறை என்பதால் கோவை புலியகுளத்தில் உள்ள சூலூர் மாஜிஸ்திரேட்டு வேடியப்பன் வீட்டுக்கு 7 பேரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை வருகிற 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்து வேனில் ஏற்றினார்கள். அப்போது கைதான 7 பேரும் தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதற்கிடையில் கைதான தி.மு.க. நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குட்கா தொழிற்சாலையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் தப்பி விடாமல் காவல் துறையினருக்காக போராடிய தி.மு.க.வினரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் வீட்டுக்கும் போலீசார் சென்றுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது அதை திசை திருப்புவதற்காக காவல் துறை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள இந்த பொய் வழக்கை போலீசார் வாபஸ் பெறாவிட்டால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story