வீடு கட்டி தருவதாக 10 பேரிடம் ரூ.1¾ கோடி மோசடி கட்டுமான அதிபர் கைது
வீடு கட்டி தருவதாக கூறி 10 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 75 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கட்டுமான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்தவர் முகமது கஜியானி (வயது61). இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீடு வாங்குவதற்காக கட்டுமான அதிபர் ரிஸ்வான் நசீம்(40) என்பவரிடம் ரூ.35 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டுமான அதிபர், முகமது கஜியானிக்கு வீடு எதையும் கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
எனவே இதுகுறித்து முகமது கஜியானி டோங்கிரி போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரிஸ்வான் நசீம் வீடு கட்டி தருவதாக கூறி 10 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 75 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கட்டுமான அதிபர் ரிஸ்வான் நசீமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story