தேர்தல் அதிகாரியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் அதிகாரியை கண்டித்து தாணிக்கோட்டகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்கு 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களுக்கான முறையான காரணங்களை கூறாத தேர்தல் அலுவலர் ஞானசேகரனை கண்டித்து தாணிக்கோட்டகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அதிகாரியை கண்டித்தும், முறையாக தேர்தல் நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், செயலாளர் வெற்றியழகன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், நெடுஞ்செழியன், வடுகையன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story