பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் கரூர் காமராஜர் ரோட்டிலுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவி செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் குருசாமி வரவேற்று பேசினார்.

மாவட்ட அமைப்பு செயலாளர் தண்டபாணி, பொருளாளர் தெம்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பி.எஸ்.என்.எல். அலுவலக பணிகளை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வெளி ஆட்களை வைத்து செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நிறுவனத்தின் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மருத்துவ வசதிகளை குறைக்காமல் இருக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யாமலிருக்க வேண்டும். எழுத்தர் நிலையில் புதிய நியமனங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விளக்க அட்டையினை தங்களது சட்டையில் அணிந்தபடி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார்.


Next Story