சேலத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழிப்பு: கைதான வாலிபர்களின் செல்போனில் ஆபாச வீடியோ


சேலத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழிப்பு: கைதான வாலிபர்களின் செல்போனில் ஆபாச வீடியோ
x
தினத்தந்தி 5 May 2018 4:54 AM IST (Updated: 5 May 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

கைதான வாலிபர்களின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

சேலம்,

சேலத்தில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த வழக்கில் கைதான வாலிபர்களின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தன. இவர்களால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர், கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனது தாத்தாவை அருகில் இருந்து கவனித்தார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கும், ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக் (வயது 24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நைம் மாலிக் அந்த பெண்ணிடம், திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்த அந்த பெண்ணுக்கு குளிர்பானம் வாங்கி, அதில் மதுவை கலந்து அவருக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மயக்கம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு நைம் மாலிக் தனது நண்பர்கள், சேலம் 4 ரோடு காமராஜ் காலனியை சேர்ந்த நபீஷ் (29), பெரமனூரை சேர்ந்த ரஞ்சித் என்கிற விக்னேஸ் (25) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி மாறி மாறி கற்பழித்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை கற்பழித்ததாக நைம்மாலிக் மற்றும் அவரது நண்பர்களான நபீஷ், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை குறித்து போலீசார் கூறும் போது, ‘கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்து பல ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் உள்ளன. எனவே இவர்களால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளனரா? என விசாரித்து வருகிறோம். இதுதவிர தங்கும் விடுதி ஊழியர்கள் உள்பட வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

Next Story