“தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள்” பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு


“தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள்” பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 May 2018 4:30 AM IST (Updated: 6 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

“தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கிறார்கள்“ என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி,

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை நூற்றுக்கு நூறு சதவீதம் தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என திட்டம் அமைக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் எந்த சிரமமும் இல்லாமல், தாங்கள் படித்த ஊரிலோ அல்லது சொந்த ஊரிலோ நீட் தேர்வு எழுத சொல்வது தான் உகந்ததாக இருக்கும்.

வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், சில மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைத்தது தவிர்க்க முடியாததாகி விட்டது. இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.

தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் தலைவர்கள் ‘நீட்‘ தேர்வு விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழக அரசு எல்லா துறைகளிலும் நாடகமாடி வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story