பிற மாநில தலைவர்கள் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்கு சந்தித்தார்களா? கனிமொழி எம்.பி. பேட்டி
பிற மாநில தலைவர்கள் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை 3-வது அணி அமைப்பதற்காக சந்தித்தார்களா? என்பதற்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.
திருச்சி,
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று திருச்சிக்கு விமான விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: 3-வது அணி அமைக்கும் முயற்சியில் பிறமாநில தலைவர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழகத்தில் தி.மு.க.வின் செல்வாக்கும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செல்வாக்கும் வளர்ந்துள்ளது. எனவே, பிறமாநில தேசிய தலைவர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள். அப்போது அந்தந்த மாநில பிரச்சினைகள் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால், 3-வது அணி பற்றியோ கூட்டணி குறித்து பேச சந்திக்கவில்லை.
கேள்வி: 3-வது அணி அமைக்கும் முயற்சியினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுகிறதா?
பதில்: செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் எல்லாம் ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்கள். இது கூட்டணிக்கான சந்திப்போ 3-வது அணிக்கான பேச்சுவார்த்தையோ கிடையாது. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே.
கேள்வி: ‘நீட்’ தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்து அலைக் கழிக்கப்படுகிறார்களே?
பதில்: ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு எத்தனை மையங்கள் வேண்டும் என தமிழக அரசானது மத்திய அரசிடம் தெளிவாக எடுத்து கூறி இருக்க வேண்டும். அதே வேளையில் மத்திய அரசும் வழக்கம்போல தமிழக மாணவர்கள் மீது அக்கறை எடுத்து கொள்ளவில்லை. இதனை அதிகாரிகளும் பெரிதாக எண்ணவில்லை. நீட் தேர்வே வேண்டாம் என மாணவர்கள் சொன்ன நிலையில் தற்போது மாணவ- மாணவிகளுக்கு போதுமான மையங்கள் கூட தரமுடியாத நிலையில் தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story