தமிழகத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை கர்நாடகா தேர்தல் அறிக்கையாக பா.ஜனதா வெளியிட்டு உள்ளது


தமிழகத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை கர்நாடகா தேர்தல் அறிக்கையாக பா.ஜனதா வெளியிட்டு உள்ளது
x
தினத்தந்தி 6 May 2018 10:30 PM GMT (Updated: 6 May 2018 7:41 PM GMT)

தமிழகத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்களை கர்நாடகா தேர்தலில் பா.ஜனதாகட்சிதேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது என்று துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவில் அண்ணாபாரம்தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவுக்கு தொழிற்சங்க தலைவர் டி.எல்.சிங் தலைமை தாங்கினார். பேரூராட்சி கழக செயலாளர் மூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், முன்னாள் நகரசெயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்சங்க செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். விழாவில் சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்து இனிப்புவழங்கி பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என கனவு காண்கிறார். அது நடக்காது. தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு விரைந்து வழங்கி வருகின்றது. ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான இருசக்கரவாகனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டுசிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக நடப்பாண்டில் நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தாலிக்கு ஒருபவுன் தங்கம், மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி, அம்மா உணவகம் திட்டங்கள் உலக அளவில் பாராட்டப்பட்டவை யாகும்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை வழங்கினார்களோ? அந்த திட்டங்களைத்தான் தற்போது தேர்தல் அறிக்கையாக தயாரித்து பா. ஜனதாகட்சி கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால் அதற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா. 2016 -ம் ஆண்டு விவசாயிகளின் நலன்காக்க சிறு குறு விவசாயிகளின் முழு கடன்7ஆயிரம்கோடிகடனை தள்ளுபடி செய்துள்ளது நமது அரசு. அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் ஆட்சிதான் ஜெயலலிதாவின் ஆட்சி.

இந்த ஆட்சியையாரும் அசைக்கவேண்டும் என்று யாரும் கனவு கண்டால் அவர்களின் கனவு பலிக்காது.இன்றுதிரைப்படதுறையில் இருந்து ஓய்வு பெற்றந டிகர்கள் 65 வயதை தொட்டுக்கொண்டிருக்கும் நடிகர்கள் தொடர்ந்து இனிமேல் கதாநாயகனாக நடிக்க முடியாதவர்கள், அரசியலில் ஜெயலலிதா இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி தனது சினிமா மூலம் மக்களிடம் ஏற்பட்ட தொடர்பைபயன்படுத்தி முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்காரவேண்டும் என சொல்கிறார்கள். இவர்களைபொறுத்தவரை செல்லாத ரூபாய் நோட்டுகள். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story