நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காக வெளிமாநிலத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காக வெளி மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹெலன்டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மகளிர் தொண்டரணி மாநில துணை அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மகளிரணி மாவட்ட அமைப்பாளர்கள் அசோக்ராணி, கண்ணகி, மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர்கள் கமலாரவி, பரிமளம் ஜெயராமன், தி.மு.க. நகர செயலாளர் நீலமேகம், இறைகார்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மையம் போதிய அளவில் தமிழகத்தில் ஒதுக்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடுசெய்வதன் மூலம் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும். மேலும் ராஜஸ்தான் செல்லும் ரெயில் தாமதமாக சென்றதால் அங்கு தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
முத்தலாக்தடை சட்டம், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக முத்தலாக் தடைசட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நோக்கம். நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது தி.மு.க. தான்.
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்வதால் 1 சதவீத தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 சதவீதம் என்றாலும் பாதிப்பு தானே. அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும். நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறார்கள். தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர் என்பது தெரியும். அதற்கு ஏற்ப போதிய மையங்களை ஒதுக்காதது ஏன்? தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடாது என்பதற்காக இது போன்ற செயலை மத்திய அரசு செய்கிறது.
தமிழக அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயலை செய்கிறது. ஆட்சியை தக்க வைப்பதும், பையை நிரப்பும் நோக்கிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தும் எண்ணம் இல்லை. பிரதமர், தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க மறுக்கிறார். எந்த கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு காதில் வாங்குவது இல்லை. மதிப்பது இல்லை. நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினால் அ.தி.மு.க.வினர் பச்சைக்கம்பளம் விரிக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் இவர்கள் சுயமரியாதையை இழந்து ஆட்சி நடத்தி என்னபயன்?.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story