மாவட்ட செய்திகள்

காவிரியில் மணல் அள்ளுவதாக வழக்கு: கரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court ordered to take action against Karoor Collector

காவிரியில் மணல் அள்ளுவதாக வழக்கு: கரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

காவிரியில் மணல் அள்ளுவதாக வழக்கு: கரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
காவிரியில் மணல் அள்ளுவதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளாது.

மதுரை,

கரூரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் எடுத்து வருகின்றனர். இதனால், நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக பாதிக்கிறது. எனவே, கோர்ட்டு தலையிட்டு காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர், மனுதாரரின் மனுவை கரூர் கலெக்டர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.