பெண்களை தாக்கியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
பெண்களை தாக்கியவரை கைது செய்யக்கோரி சுமார் 50 பேர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வேலூர்,
வேலூர் கொணவட்டம் தேவி நகரில் உள்ள பொதுக்குழாயில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வெளியேறி அந்தப்பகுதியில் தேங்கி உள்ளது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குடிநீர் குழாயின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் தாய், மகளை தாக்கி இருக்கிறார். இதில் 2 பெண்களும் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசல் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பெண்களை தாக்கிய அதே நபர் அவர்களுடைய வீட்டுக்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்யக்கோரி சுமார் 50 பேர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story