மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது + "||" + The son of the son-in-law has been beaten by a painter near Arakkonam

அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது

அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை தாய் - மகன் கைது
அரக்கோணம் அருகே பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உளியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சன்ராஜ் என்ற ராஜ்குமார் (வயது 21), பெயிண்டர். இவருடைய நண்பர் விஜயன் (26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கீழாந்தூர் பகுதியில் உள்ள லலிதா (50) என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாக்கெட் கேட்டு உள்ளனர்.


அப்போது லலிதா தண்ணீர் பாக்கெட் இல்லை என்று கூறினார். இதனால் ராஜ்குமாருக்கும், லலிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கட்டையால் தாக்கினார்

அப்போது அங்கு வந்த லலிதாவின் மகன் சேட்டு என்ற சுதாகரன் (26) கீழே கிடந்த கட்டையை எடுத்து ராஜ்குமாரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

தாய்-மகன் கைது

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, லலிதா, சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கடனை திருப்பி கேட்டவரை கொன்ற வழக்கில் முக்கிய நபர் கைது; அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை
கடனை திருப்பி கேட்டவரை கொன்ற வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
2. அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.
3. பாபநாசம் அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை அண்ணன்-அண்ணி உள்பட 4 பேர் கைது
பாபநாசம் அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன், அண்ணி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு இறந்த சிறுமியின் உடலை கொண்டு செல்ல முயன்றவர் கைது
இறந்த சிறுமியின் உடலை ஈரோடு கலெக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையை மீறி மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. லஞ்ச வழக்கில் கைதான சேலம் கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
லஞ்ச வழக்கில் கைதான சேலம் அரசு போக்கு வரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.