செங்கல்பட்டு, பூந்தமல்லியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு


செங்கல்பட்டு, பூந்தமல்லியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2018 9:45 PM GMT (Updated: 18 May 2018 6:25 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 365 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு வாகனங்களில் முதலுதவி உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள், அவசரகால வழி சரியாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் வாகன டிரைவர், கண்டக்டரிடம் பாதுக்காப்பான முறையில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில், முதலுதவி போன்ற பாதுகாப்பு உபகரனங்கள் குறைபாடு உடைய வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டன.

இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு பொறுப்பு வருவாய் ஆர்.டி.ஓ. சக்திவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையா, சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட பூந்தமல்லி, ஆவடி, நசரத்பேட்டை, திருவேற்காடு, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கொண்டு வரப்பட்டது. இதனை திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் 348 வாகனங்களில் 296 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 247 வாகனங்கள் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் ரமா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story