தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 24–ந்தேதி நடக்கிறது


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 24–ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 May 2018 2:30 AM IST (Updated: 20 May 2018 11:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வருகிற 24–ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வருகிற 24–ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மீனவர் அணி, இலக்கிய அணி, வக்கீல் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு, ஆதிதிராவிடர் நல அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.


Next Story