தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமி


தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 May 2018 5:14 AM IST (Updated: 20 May 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொடைக்கானல்,

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என கொடைக்கானலில் நடந்த கோடைவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் நடந்த விழாவில்அவர் பேசிய தாவது:-

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக கொடைக்கானல் திகழ்கிறது. கொடைக்கானலை மேம் படுத்த பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வகையில், நவீன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து அரசு பரிசீலனை செய்துநடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் முதல்- அமைச் சராக ஜெயலலிதா பதவி ஏற்றது முதல் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கொடைக்கானல் பிரதான சாலை, பழனி சாலை, தாண்டிக்குடி சாலை யில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடக்கின்றன.

நிலச்சரிவுகளை தடுக்க சிறுபாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் கொடைக் கானல் முதல் அடுக்கம் வழியாக பெரியகுளத்துக்கு ரூ.70 கோடியில் 36 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதில் மீதமுள்ள 7 கி.மீ. சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்-நத்தம் சாலை, பழனி-தாராபுரம் சாலை வழியாக பழனிக்கு தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர் களுக்காக தனி நடைபாதை அமைக்கப்படும்.

இயற்கையை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும். மரங்கள், செடிகள் தனக்காக அல்லாமல் மனிதர்களுக்காக பயன்படுகிறது. இங்குள்ள மலர்களை பார்க்கும்போது தனக்காக வாழாமல் பிறருக் காக வாழ்ந்து மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தான் நினைவுக்கு வருகிறார்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்ற னர். இந்தியாவில் சட்டம், ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்திய அளவில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் சிறந்ததாக பரிசு பெற்றுள்ளது. சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையம் 5-வது இடம் பிடித்துள்ளது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு இதுவே சான்று.

மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களை பெற்றுத் தந்துள்ளோம். கேபிள் டி.வி. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.234 கோடி கடன், விவசாயிகளுக்கு பயிர்க் கடன், வறட்சி நிவாரணம், பயிர்க்காப்பீட்டு தொகை என பெற்றுக் கொடுத்துள்ளோம். இன்னும் மீதமுள்ள விவசாயி களுக்கும் பயிர்க்காப்பீடு தொகை பெற்று தரப்படும்.

மழைநீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள், குளங் கள், கால்வாய்களை தூர்வார குடிமராமத்து பணிகள் என விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 1,519 குளங்களை தூர்வார ரூ.325 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது. இதற்காக மத்திய அரசிடம்விருதுபெற்றுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டு களுக்கு மேல் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தேன். அதன்படி விரைவில் அவர்கள் அனை வரும் விடுவிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டில் கல்வி வளர்ச்சி பெற்றால் அனைத்து துறை களும் வளர்ச்சி பெறும். எனவே, இந்தியாவிலேயே கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 114 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளி களாகவும், 829 நடுநிலைப் பள்ளி கள் உயர்நிலைப்பள்ளி களாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளி களாகவும் தரம் உயர்த்தப் பட்டன.

இதனால் கிராமங்களில் கல்விபெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தொடக்கக் கல்வி பெறுவோர் 99.85 சதவீதமாகவும், நடுநிலை கல்வி பெறுவோர் 99.11 சதவீதமாகவும், உயர்நிலை கல்வி பெறுவோர் 93.15 சதவீதமாகவும், மேல்நிலை கல்வி பெறுவோர் 77.64 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் 76 அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப் பட்டுள் ளன. இதனால் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 46.94 சதவீதமாக உயர்ந் துள்ளது.

தமிழக மருத்துவ துறை அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆத்தூர் பகுதியை சேர்ந்தவருக்கு 2 கைகள் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் ஏழைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 20 மாவட்டங் களுக்கு காவிரி முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த 1986-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். வழக்கு தொடர்ந் தார். 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. நடுவர் மன்றம் தண்ணீர் வழங்க உத்தரவிட்டும் கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இதையடுத்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி பிரச்சினை தொடர்பாக 32 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதனை சட்ட போராட்டம் மூலம் பெற்றுத் தந்தது அ.தி.மு.க. அரசு. இந்த பெருமை முழுவதும் ஜெயலலி தாவை தான் சேரும். விவசாயி களுக்காக, தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவது அ.தி.மு.க. தான். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story