ரூ.44 லட்சம் போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது


ரூ.44 லட்சம் போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 May 2018 5:35 AM IST (Updated: 21 May 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நாசிக் மாவட்டம் பதார்டி பதாவை சேர்ந்த 3 பேரை சம்பவத்தன்று போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

 ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், மும்பை மிரா ரோடு பகுதியை சேர்ந்த பரூக் ஷேக்(வயது23) மற்றும் நக்பதாவை சேர்ந்த சலீம் சவுரதியா(30) ஆகியோருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் மும்பை லோக்கண்டவாலா பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரத்து 200 கிலோ மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் அவர்களை நாசிக் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தியபின் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story