ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்பு: கர்நாடகத்தில் இன்று கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்படும்
ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்பதையொட்டி கர்நாடகத்தில் இன்று(புதன்கிழமை) கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்பதையொட்டி கர்நாடகத்தில் இன்று(புதன்கிழமை) கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புனிதமற்ற கூட்டணியை...கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையான மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து உள்ளனர். ஆனால் ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் புனிதமற்ற கூட்டணியை அமைத்துக் கொண்டு நாளை(அதாவது இன்று) ஆட்சி அமைக்கின்றன. இது மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. எனவே நாங்கள், நாளைய(புதன்கிழமை) தினத்தை மக்கள் தீர்ப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த கூட்டணி ஆட்சியை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று கருப்பு துணியை கட்டி போராட்டம் நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நடைபெறும் போராட்டத்தில் பா.ஜனதா முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். தமது கட்சிக்கு மக்கள் முழு ஆதரவு வழங்கவில்லை என்பதால், விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று குமாரசாமி சிருங்கேரியில் கூறி இருக்கிறார்.
குமாரசாமி மறந்துவிட்டார்இதன் மூலம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பதை குமாரசாமியே ஒப்புக்கொண்டுள்ளார். லே£க்ஆயுக்தாவை பலப்படுத்தி முறைகேடு செய்தவர்களை சிறையில் தள்ளுவதாக அவர் கூறினார். இப்போது அதுபற்றி பேசாமல் அவர் மவுனமாக இருக்கிறார். முதல்–மந்திரி பதவி கிடைத்ததும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குமாரசாமி மறந்துவிட்டார்.
தேர்தலில் காங்கிரஸ் அரசின் தோல்விகள் மற்றும் ஊழல்களால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அதனால் பா.ஜனதாவை அதிக இடங்களில் மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி 119 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துவிட்டது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.
நீண்ட நாட்களுக்கு நீடிக்காதுபா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் பா.ஜனதா கலந்து கொள்ளாது. நாளை(அதாவது இன்று) நடைபெறவிருந்த தோல்வி அடைந்த வேட்பாளர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.