காந்திமார்க்கெட்டுக்கு வரும் லாரிகளை தடை செய்யக்கூடாது வியாபாரிகள் கோரிக்கை மனு


காந்திமார்க்கெட்டுக்கு வரும் லாரிகளை தடை செய்யக்கூடாது வியாபாரிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் குமார் எம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் குமார் எம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “திருச்சி மாநகரில் இயங்கி வரும் காந்தி மார்க்கெட்டுக்கு 1-ந் தேதி முதல் வரும் காய்கறி லாரிகள் மட்டும் தடை செய்யப்படும் என்றும், கள்ளிக்குடி மார்க்கெட் இயங்கும் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்துள் ளார்.

இதனால் வியாபாரிகளுக்கிடையே குழப்பமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி பழைய பால்பண்ணை அருகே ஒரு மார்க்கெட்டும், திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஒரு மார்க்கெட்டும் அமைய உள்ளதாக இருப்பதால் வியாபாரிகள் எங்கு செல்வது என குழப்பமான மனநிலையில் உள்ளனர். ஆகவே கள்ளிக்குடியில் புதிய மார்க்கெட் இயங்கினாலும், திருச்சி காந்திமார்க்கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகளை தடை செய்யாமல் அனுமதித்து வியாபாரிகளின் நன்மைக்காக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர். மனு அளித்தபோது எஸ்.பி.பாபு, எஸ்.கே.டி.பாண்டியன், பாலாஜி, பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story