தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 10:45 PM GMT (Updated: 2018-05-24T01:47:28+05:30)

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாகையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதையும், பொதுமக்களை அழைத்து பேசி சுமூக தீர்வை ஏற்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் நாகை அவுரித்திடலில் நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சி சுந்தரம், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கீழ்வேளூர் எம்.எல்.ஏ. மதிவாணன் கலந்து கொண்டு பேசி னார்.

ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்தும், பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்டத்துறை செயலாளர் மனோகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பழனியப்பன், நகர செயலாளர்கள் போலீஸ் பன்னீர், செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், தாமஸ் ஆல்வா எடிசன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story