மும்பை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


மும்பை சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2018 4:45 AM IST (Updated: 24 May 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை, 

மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 2.30 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, எதிர் முனையில் பேசிய நபர் மும்பை சென்டிரல் ரெயில்நிலையத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து மும்பை சென்டிரல் ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

பரபரப்பு

மேலும் போலீசார் மும்பை சென்டிரலில் இருந்து புறப்பட்ட ரெயில்களில் மோப்ப நாய்களுடன் சோதனை போட்டனர். இதனால் ரெயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரெயில்நிலையத்தில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story