தனியார் நிறுவனத்தில் ரூ.4¾ கோடி கையாடல் செய்த முன்னாள் ஊழியர் கைது


தனியார் நிறுவனத்தில் ரூ.4¾ கோடி கையாடல் செய்த முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2018 5:02 AM IST (Updated: 2 Jun 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தவர் திபுன்ஜ் குப்தா (வயது23).

மும்பை,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திபுன்ஜ் குப்தா வேலையை விட்டு நின்று விட்டார். இந்தநிலையில் அவர் வேலைபார்த்து வந்த நிறுவனத்தில் கணக்குகளை சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4 கோடியே 71 லட்சம் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நிறுவன அதிகாரி வக்கோலா போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணக்காளராக பணிபுரிந்து வந்த திபுன்ஜ் குப்தா தான் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அவரது வங்கிக்கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்துவிட்டு சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு விரைந்த போலீசார் அங்குள்ள காஜியாபாத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story