கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் கோரிக்கை மனு
ஆம்பூர் கஸ்பா பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கடனுதவி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 288 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு
ஆம்பூர் நகராட்சி கஸ்பா ஏ பகுதியில் 4, 5, 6 ஆகிய வார்டுகள் உள்ளன. இந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் மேற்கண்ட 3 வார்டுகளிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இந்தப்பகுதியில் ஏற்கனவே தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் இதேபகுதியில் அமைக்க ஆய்வு பணி நடந்து வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும். எனவே சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். கஸ்பா பகுதியில் அமைத்தால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளனர்.
கால்நடை மருத்துவமனை
அரக்கோணம் தாலுகாவில் உள்ள சயனபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கால்நடை கிளை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு டாக்டர்கள் யாரும் வராததால் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமால்பூர் அல்லது பின்னாவரம் கிராமத்திற்கு கால்நடைகளை ஓட்டிச்செல்லவேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதிக கால்நடைகளை கொண்ட எங்கள் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
மணல்திருட்டை தடுக்கவேண்டும்
கே.வி.குப்பம் அருந்ததியர் காலனியை சேர்ந்த முருகன் மனைவி மல்லிகா கொடுத்துள்ள மனுவில் எனது கணவர் முருகன் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தபோது 2015-ம் ஆண்டு மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். அதற்கான நிவாரணம் கேட்டு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனக்கு 3 குழந்தைகள் உள்ளதால் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. எனவே கருணைகூர்ந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் பொய்கை, விரிஞ்சிபுரம், செதுவாலை, சேண்பாக்கம் பகுதிகளில் பாலாற்றில் இருந்து மணல் திருட்டு நடைபெறுகிறது. பாலாற்றை பாதுகாக்க மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ.7¾ லட்சம் நிதி உதவி
கூட்டத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி, வேலூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின்கீழ் பல்வேறு சிறுதொழில்கள் செய்ய ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள நிதி உதவிகளை மின்னணு பரிமாற்றம் மூலம் பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் ராமன் வழங்கினார்.

Related Tags :
Next Story