வாலாந்தரவை இரட்டை கொலை: ராமநாதபுரம் கோர்ட்டில் மேலும் 2 வாலிபர்கள் சரண்


வாலாந்தரவை இரட்டை கொலை: ராமநாதபுரம் கோர்ட்டில் மேலும் 2 வாலிபர்கள் சரண்
x
தினத்தந்தி 6 Jun 2018 3:45 AM IST (Updated: 6 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

வாலாந்தரவை இரட்டை கொலை வழக்கில் ராமநாதபுரம் கோர்ட்டில் மேலும் 2 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர்கள் பூமிநாதன், விஜய் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் 21 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ள நிலையில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஏந்தல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் வாசு என்ற புல்லாக்(வயது 36), வாலாந்தரவை பூசைமுத்து மகன் விக்னேஸ் என்ற அன்டர்டேக்கர்(20) ஆகியோர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–1ல் சரணடைந்தனர். இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வாலாந்தரவையில் நடைபெற்ற மேற்கண்ட இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுவதால் அமைதியை உருவாக்கும் வகையில் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி அந்த பகுதியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் தரப்பினர் 20 பேர் மீதும், தர்மா உள்ளிட்ட கார்த்தி தரப்பினர் 20பேர் மீதும் போலீசார் அமைதி உத்தரவாதம் அளிக்கும் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்துள்ளதன் மூலம், உத்தரவாத காலத்திற்கு முன்பு பிரச்சினைகளில் ஈடுபட்டால், உத்தரவாத காலம் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story