வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை 2 பேர் கைது; 700 மதுபாட்டில்கள் பறிமுதல்


வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை 2 பேர் கைது; 700 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 700 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தில் ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார், மணஞ்சேரி கிராமத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுவிற்பனையில் ஈடுபட்டதாக மணஞ்சேரி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் லட்சுமணன் (வயது28), அகராத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜசேகரன் மகன் சுரேஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 700 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அகராத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story