டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ. 3½ லட்சம் கொள்ளை காரில் வந்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு


டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ. 3½ லட்சம் கொள்ளை காரில் வந்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே அரிவாளை காட்டி மிரட்டி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ. 3½ லட்சம் கொள்ளை காரில் வந்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 45). இவர் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நக்கசேலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்ற தொகையை, மணிவண்ணன் பெரம்பலூரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவது வழக்கம். வழக்கம்போல் நேற்று அவர் டாஸ்மாக் கடையில் விற்பனையான தொகை ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 180-ஐ வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மங்கூன் வழியாக சத்திரமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் வந்தவர்கள் திடீரென்று காரில் இருந்து இறங்கி மணிவண்ணன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி, அவரை தாக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் உயிருக்கு பயந்து மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 180 இருந்த பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு மணிவண்ணன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதனபேரில் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story