சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் மங்கலட்சுமி, மாவட்ட துணை தலைவர்கள் அமுதா, வீரம்மாள், செயலாளர்கள் எழிலரசி, பாத்திமாபீவி, சரசு, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வசந்தராணி வரவேற்றார்.
ஆர்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், பொதுச்செயலாளர் பாபு, மீனவர் அணி தலைவர் கார்த்தி, மாநில சமூக ஊடக பிரிவு செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி பொதுச்செயலாளர் ராமதுரை, மாணவர் அணி பொதுச்செயலாளர் மணிவண்ணன், சேவாதள மாவட்ட தலைவர் ஜெகன், மூத்த தலைவர்கள் பாண்டுரங்கன், சக்திவேல், அன்பழகன், கலியமூர்த்தி, ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழிலா பிரிவு தலைவர் ராம்ராஜ் நன்றி கூறினார்.