‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:00 AM IST (Updated: 8 Jun 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்தும், மாணவிகளின் மரணத்திற்கு காரணமான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும் காங்கிரஸ் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிப்காட் (ராணிப்பேட்டை),

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி அதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், மாணவிகளின் மரணத்திற்கு காரணமான ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும் காங்கிரஸ் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் நாகேஷ் உள்பட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷமிட்டனர். 

Next Story