மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstrators demanded to emphasize demands

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ரமேஷ் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), சிவகுருநாதன் (தமிழக தமிழாசிரியர் கழகம்), லட்சுமிநாராயணன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), கல்யாணசுந்தரம் (தமிழக ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு உயர்வில் 21 மாதகால நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்து முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும்.


சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வித்துறையை குழப்பத்தில் ஆழ்த்தி நிர்வாகத்தினை சீர்குலைக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.