மாவட்ட செய்திகள்

சொத்து தகராறில் அண்ணியை குத்திக்கொன்ற வாலிபர் சிக்கினார் + "||" + A young man who killed a sister in law a property dispute

சொத்து தகராறில் அண்ணியை குத்திக்கொன்ற வாலிபர் சிக்கினார்

சொத்து தகராறில் அண்ணியை குத்திக்கொன்ற வாலிபர் சிக்கினார்
பால்கர் மாவட்டம் விரார் அன்னாபாடாவை சேர்ந்தவர் சசிகாந்த். இவரது மனைவி ஆர்த்தி(வயது32). அங்குள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் சசிகாந்துடன் அவரது பெற்றோரும் வசித்து வருகின்றனர்.
வசாய்,

சசிகாந்தின் சகோதரர் ஸ்ரீகாந்த் (30) வீட்டில் தனக்குரிய பங்கை பிரித்து தருமாறு கேட்டு சண்டையிட்டு வந்தார். இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் நேற்றுமுன்தினம் குடித்துவிட்டு வந்து ஆர்த்தியிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் ஆர்த்தியை முதுகு, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த ஆர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த்தை கைது செய்தனர்.