பழுதடைந்த வருண வாகனத்தை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
பழுதடைந்த வருண வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு 8.2.2002 அன்று வருண வாகனத்தை வழங்கியது. இதன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க முடியும். இந்த வாகனம் பழுதடைந்து காணப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தை நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வாகனம் விரைவில் சீரமைக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story