1,500 எக்டேரில் குறுவை நெல் பயிர் சாகுபடி - கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஆண்டுக்கு 1,500 எக்டேர் அளவில் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் திருமழப்பாடி கிராமத்தில் 3 ஏக்கரில் வேளாண்மைத்துறையின் சார்பில் எந்திரங்கள் மூலம் நெல் நடவு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடியில் நடவு செலவை குறைப்பதற்கும், ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும் நெல் நடவு எந்திரங்கள் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 1,500 எக்டேரில் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதனை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் தமிழக அரசின் சார்பில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு எந்திரங்களைக் கொண்டு நடவு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் 179 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் டெல்டா பகுதிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். தற்பொழுது, டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) உதயகுமார், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) நாகநாதன், உதவி இயக்குனர் (வேளாண்) கண்ணன், வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story