திருமணத்திற்கு முந்தைய நாளில் மின்சாரம் தாக்கி மாப்பிள்ளை பலி


திருமணத்திற்கு முந்தைய நாளில் மின்சாரம் தாக்கி மாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 18 Jun 2018 4:30 AM IST (Updated: 18 Jun 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே திருமணத்திற்கு முந்தைய நாளில் மின்சாரம் தாக்கி மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொய்யுண்டார்கோட்டை ஊராட்சியை சேர்ந்த தெக்கூர் வடக்குதெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மாரிமுத்து (வயது24). கொத்தனார். இந்தநிலையில் இவருக்கும், இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் நேற்று காலை அதே பகுதியிலுள்ள ஒரு கோவிலில் எளிய முறையில் உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் செய்து வந்தனர்.

இந்தநிலையில் மாரிமுத்து நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டில் எந்திரம் உதவியோடு தளம் அமைக்கும் வேலையை செய்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைகண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதனை தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தடை பட்டது. இதனால் அவரது உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story