பழனி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை குடும்ப பிரச்சினையா? போலீஸ் விசாரணை


பழனி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை குடும்ப பிரச்சினையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 Jun 2018 3:30 AM IST (Updated: 18 Jun 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

நெய்க்காரப்பட்டி,

பழனியை அடுத்த பாலசமுத்திரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு லெத்திகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லெத்திகா குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஆனந்தன் மட்டும் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று தாலுகா போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? குடும்ப பிரச்சினை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story