திவா ரெயில்நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி


திவா ரெயில்நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 19 Jun 2018 8:39 AM IST (Updated: 19 Jun 2018 8:39 AM IST)
t-max-icont-min-icon

திவா ரெயில்நிலையம் அருகே மூடி இருந்த ரெயில்வே கேட்டை ஸ்கூட்டரில்கடந்து செல்லமுயன்ற 2 வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலியானார்கள்.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள திவா ரெயில்நிலையம் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த கேட் நேற்று காலை 11 மணியளவில் ரெயில் செல்வதற்காக மூடப்பட்டது. இதில், ரெயில்வே கேட் நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் ஸ்கூட்டரில் வந்து நின்ற 18 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பொறுமை இழந்தனர்.

இதனால் அவர்கள் தங்களது ஸ்கூட்டரை கேட்டின் கீழ் உள்ள இடை வெளி வழியாக தள்ளி வந்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் தண்ட வாளத்தை கடந்து செல்ல முயன்றனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்கூட்டர் மீது மோதி யது. மேலும் ஸ்கூட்டர் ரெயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரத்துக்கு இழுத்து செல்லப் பட்டது. இதில், வாலிபர்கள் 2 பேரும் உடல் சிதைந்து படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில் நிறுத்தப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த இரு வரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் பலியாகிவிட்டதாக கூறினர்.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசார ணையில், பலியான வாலிபர் கள் உத்தரபிர தேசத்தை சேர்ந்த அங்ரே சரபித் சவுத்ரி(வயது25), ராம்சரண் சவுத்ரி(30) என்பதும், இருவரும் திவா பகுதியில் கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story